கடலூர்
கஞ்சா, சாராயம் விற்ற 4 பேர் கைது
|கஞ்சா, சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் நேற்று கர்ணத்தத்தில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்த குபேந்திரன்(வயது 19), கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் வினோத்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்றதாக புதுப்பேட்டையை சேர்ந்த ராமசாமி மனைவி பாக்கியலட்சுமி (52), கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி மகன் பிரபாகரன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 15 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.