< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
18 April 2023 12:15 AM IST

கோத்தகிரி அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின்படி, கோத்தகிரி பகுதியில் கஞ்சா ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரஹ்மான்கான், போலீசார் முஜாகிதீன், சுரேந்தர் ஆகியோர் நேற்று கோத்தகிரி அருகே அரவேனு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கீழ் கைத்தளாவை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 24) என்பவர் 500 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும், தவிட்டு மேடு பகுதியை சேர்ந்த கவுதம் (23) என்பவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் கைத்தளாவை சேர்ந்த தினேஷ் குமார் (23) 200 கிராம் கஞ்சாவும், அவரது நண்பரான நவீன் (26) 100 கிராம் கஞ்சாவும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்