< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
20 March 2023 12:15 AM IST

கோவையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை

வெள்ளலூர் ரோடு ரெயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த, சிங்காநல்லூர் லட்சுமணநகரை சேர்ந்த சூர்யா (வயது 29), ஒண்டிப்புதூர் தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்தர் (25) ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் சபரிநகரை சேர்ந்த சிவபிரசாத் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் வெள்ளலூர் ரோடு சித்தண்ணபுரத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்