< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
|14 March 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற 4 பேர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த செல்வகுமார் (வயது 27), சி.பி.எச். ரோடை சேர்ந்த டெல்பின் வால்பிரகாஷ் (26), கேசவதிருப்பாபுரத்தை சேர்ந்த பைசல் (27) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல ராஜாவூர் அந்தோணியார் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (43) என்பவரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.