< Back
மாநில செய்திகள்
இரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

இரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
29 Dec 2022 12:15 AM IST

இரணியல் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் கண்ணாட்டுவிளை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 வாலிபர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் ஒரு பையில் 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கஞ்சாவுடன் சிக்கியவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), கக்கோடு பகுதியை சேர்ந்த அஜித் (27), அதே பகுதியை சேர்ந்த தாணுதாஸ் (35), குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த காளிதாஸ் (23) ஆகிய 4 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்