< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
23 Nov 2022 4:03 AM IST

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்

பணகுடி:

பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஜமால், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் பணகுடி புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த குமார் மகன் அரிகரன் (வயது 20), சுரேஷ் மகன் சஞ்சய் (19), இசக்கிமுத்து மகன் முத்துகுமார் (20), ரத்னவேல் மகன் சபரிராஜன் (19) ஆகிய நான்கு பேர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்ததில் 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. பணகுடி போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்