வேலூர்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
|கழிஞ்சூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி
காட்பாடி கழிஞ்சூர் ஏரிக்கரை அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நடவடிக்கை எடுக்க விருதம்பட்டு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் கழிஞ்சூர் ஏரிக்கரை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 27) கழிஞ்சூர் பி.டபிள்யூ.டி.நகரை சேர்ந்த மதன்குமார் (29), கோபாலபுரத்தை சேர்ந்த பெஞ்சமின் (27), கழிஞ்சூரை சேர்ந்த கார்த்தி (26) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதில் சீனிவாசன், மதன்குமார் ஆகிய இருவர் மீது வேலூர் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினர்.