< Back
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2023 12:30 AM IST

கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மேலப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வீரவநல்லூரைச் சேர்ந்த முத்துகுமார் என்ற அஜித் (வயது 23), கருப்பந்துறையை சேர்ந்த மகாராஜன் (20), ஜோன்ராஜ் (31), கடையம் செக்கடியூரை சேர்ந்த இசக்கிமுத்து (36) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 315 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்