< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2023 7:34 PM GMT

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளிக்கு இன்னும் 21 நாட்களே இருப்பதால் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் திரி தயாரிப்பதை தடுக்க சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் வெம்பக்கோட்டை தெற்கு தெருவில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த மாரியப்பன் (வயது 42) என்பவரிடம் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்ட 1000 வாலா சரவெடிகள் 2 பெட்டிகள், பனையடிபட்டியில் தகர செட்டு அமைத்து பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த ராஜபாளையம் அருகில் உள்ள அய்யனார்புரத்தை சேர்ந்த மாரிமுத்து (30) என்பவரிடம் இருந்து பேன்சி ரக வெடிகள் 2 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல சூரார்பட்டி அசேபா காலனி பகுதியில் தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த கருப்பசாமி (36) என்பவரிடம் இருந்து 20 கிலோ பேன்சி ரக வெடிகள், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அன்பின் நகரம் மேற்கு தெருவில் வீட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த அன்பின் நகரத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (வயது 41) என்பவரிடம் இருந்து 2 பெட்டிகளில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்