< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2023 5:16 AM IST

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி, வெற்றிலையூரணி, அண்ணா காலனி, அரசரடி, கீழத்தாயில்பட்டி, வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது வெற்றிலையூரணி, அண்ணா காலனியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த அண்ணா காலனியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 30), முருகன் (37), வெம்பக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ் (43) ஆகிய 3 பேரிடம் இருந்து தலா 20 கிலோ பேன்சி ரக வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அதேபோல வெம்பக்கோட்டை தாலுகா பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் ஆலங்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சிவகாசி ரிசர்வ் லயன் பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது 38) உள்பட 2 பேர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து முத்துகுமாரை ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிராம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்