< Back
மாநில செய்திகள்
1,000 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கிய 4 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

1,000 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
14 April 2023 1:21 AM IST

1,000 கிலோ ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் அறிவுரையின்பேரிலும், திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரிலும், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மேற்பார்வையிலும் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க திருச்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது திருச்சி விமான நிலையம் அருகே செம்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி எதிரே ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு 1,000 கிலோ ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரேஷன் அரிசி மற்றும் அதை கடத்துவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரை சேர்ந்த சரவணன், கருப்பையா, அய்யப்பன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வம் ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் திருச்சி 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் முன்னிலையில் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்