< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
3 Oct 2023 1:30 AM IST

சுல்தான்பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஜல்லிபட்டி மைதானம் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த ஆரூண்(வயது 25), செஞ்சேரிமலையை சேர்ந்த கண்ணன்(34), கழுவேரிபாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி (47), சின்ன கம்மாளப்பட்டியை சேர்ந்த பால்ராஜ்(65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.600 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்