< Back
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
10 Sept 2023 12:15 AM IST

மார்த்தாண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ்பாபு தலைமையில் போலீசார் வெட்டுமணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த லெனின் (வயது 36), அனில் ராஜன்(44), செல்வராஜ்(38) மற்றும் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஜெனின்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1156 மற்றும் 65 சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்