திண்டுக்கல்
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
|வேடசந்தூரில், பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூரில், கரூர் சாலையில் உள்ள சூதாட்ட விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வேடசந்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துரைப்பாண்டி (வயது 28), திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்த சுந்தரபிரபு (28), வேடசந்தூர் சாலைத்தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30), திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த அருள்ஞானபிரகாசம் (45) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.