< Back
மாநில செய்திகள்
மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2022 2:09 AM IST

மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்டம்

மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டர் முரளீதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு குருசடி எதிரே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர்கள் தாவூரை சேர்ந்த ரெங்கன், குன்னங்காடை சேர்ந்த பிரதீஸ், பிரமேன், அழகன்பாறையை சேர்ந்த ஆன்டணி ஜோசப் ராஜ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர், அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.1,130 ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்