< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சூதாடிய 4 பேர் கைது
|25 May 2022 12:22 AM IST
பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேதி நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட பார்த்திபன்(வயது 30), கார்த்திக்(32), பிரபாகரன்(28) ரவிச்சந்திரன் (42) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.16,500-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆறுமுகம் (30) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.