மயிலாடுதுறை
ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது
|மணல்மேட்டில் ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல்மேடு;
மணல்மேட்டில் ஜாமீன் உறுதிமொழியை மீறிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குகள்
மணல்மேடு அருகே ராதாநல்லூர் ராஜசேகர்(வயது45), இளந்தோப்பு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கோகுல்பிரசாத்(24) ஆகிய இருவரும் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டனர். மணல்மேடு அருகே ஆத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுமன்(32), ஆத்தூர் ஜின்னா தெருவை சேர்ந்த தவ்பிக்(26) ஆகிய இருவர் மீதும் மணல்மேடு, மயிலாடுதுறை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.
கைது
இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்த 4 பேரும் ஜாமீன் உறுதிமொழியை மீறியதாக கூறப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் யுரேகா, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார், ராஜசேகர், கோகுல்பிரசாத், சுமன், தவ்பிக் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.