< Back
மாநில செய்திகள்
விவசாயியை தாக்கிய 4 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயியை தாக்கிய 4 பேர் கைது

தினத்தந்தி
|
22 July 2023 8:27 PM IST

தோட்டத்தில் கோழி மேய்ந்த தகராறில், விவசாயியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). விவசாயி. இவர், தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இவரது கோழிகள் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது வாழை தோட்டத்தில் புகுந்து மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், சிலருடன் சென்று பாண்டியிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அதை தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், அவரது மகன் சண்முகம் ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிந்து ஆத்திப்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (55), விஜயகுமார் (19), ரஞ்சித் (26), அஜித் (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்