< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

தினத்தந்தி
|
17 March 2023 2:43 AM IST

நெல்லை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்திப்பு பகுதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று பந்தயத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் மேலப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்