< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விவசாயிக்கு அடி-உதை; 4 பேர் கைது
|20 Dec 2022 2:48 AM IST
திசையன்விளை அருகே விவசாயியை அடி-உதைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளம் துறை குடியிருப்பை சேர்ந்தவர் சேவியர் (வயது 52). விவசாயி இவரது தோட்டத்திற்கு செல்லும் தண்ணீர் குழாயை ரம்மதபுரத்தை சேர்ந்த சுதர்சன், ஜெகதீஷ், ராஜா, செல்வராஜ் ஆகியோர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதை தட்டிகேட்ட சேவியரை 4 பேரும் சேர்ந்து அடித்து உதைத்து காயப்படுத்தியதாக சேவியர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து சுதர்சன் உள்பட 4 பேரை கைது செய்தார்.