நாமக்கல்
இரும்பு கம்பி திருடிய 4 பேர் கைது
|ராசிபுரம் பகுதியில் இரும்பு கம்பி திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்
இரும்பு கம்பி
ராசிபுரம் மற்றும் பல்லவன் நாயக்கன்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கட்டுமான பணிகளின் போது பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது பற்றி கட்டிடத்தின் உரிமையாளர்கள் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டியை சேர்ந்த வேலு மகன் குபேந்திரன் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (21), செல்வராஜ் மகன் நந்தகுமார் (23), கிருஷ்ணமூர்த்தி மகன் சந்தன் (21) ஆகிய 4 பேரையும் நேற்று போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது
போலீசார் நடத்திய விசாரணையில் 4 பேரும் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 4 டன் இரும்பு கம்பிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையொட்டி ராசிபுரம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பின்பு 4 பேரும் ராசிபுரம் கிளை சிறைச் சாலையில் அடைக்கப்பட்டனர்.