< Back
மாநில செய்திகள்
தாய், மகனை எரித்து கொன்ற 4 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தாய், மகனை எரித்து கொன்ற 4 பேர் கைது

தினத்தந்தி
|
15 July 2022 10:52 PM IST

ஊத்தங்கரை அருகே தாய், மகனை எரித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நாடக கலைஞர் செந்தாமரை கண்ணன் (வயது 55). இவரது 2-வது மனைவி கமலா (50). இவரது மகன் குரு (17). இவர்கள் 2 பேரும் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செந்தாமரைகண்ணனின் 3-வது மனைவி சத்யா, ராமதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டதும், இதையறிந்து அவரது வீட்டிற்கு சென்று சத்யாவின் 3-வது கணவனின் பைக்கை செந்தாமரைகண்ணன் தீயிட்டு கொளுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், சத்யா மற்றும் அவரது தாய் சாலா, தந்தை காவேரி ஆகியோர் செந்தாமரை கண்ணனை கொலை முடிவு செய்தனர். செந்தாமரை கண்ணனின் கமலா வீட்டுக்கு சென்று செந்தாமரை கண்ணன் வீட்டில் இருப்பதாக கருதி, வீட்டின் வெளிபக்கம் பூட்டிவிட்டு, ஜன்னலின் வழியே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சத்யா, கொலைக்கு உடந்தையாக இருந்த கணவர் செந்தாமரைகண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்