< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
மின்கம்பிகளில் தீப்பொறி ஏற்பட்டு 4 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசம்
|4 Jan 2023 1:09 AM IST
மின்கம்பிகளில் தீப்பொறி ஏற்பட்டு 4 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசமானது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தில் உள்ள கணேசன் என்பவரது கரும்பு வயலின் வழியாக உயர்மின் அழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த மின் கம்பிகளில் தீப்பொறி ஏற்பட்டு, கரும்புகள் மீது விழுந்து, தீப்பற்றியதாக தெரிகிறது.
மளமளவென தீ பரவியது. இதில் கணேசன் மற்றும் வாசுதேவன் பயிரிட்டிருந்த சுமார் 4 ஏக்கர் கரும்புகள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.