கோயம்புத்தூர்
3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை
|கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.
லாட்டரி அதிபர்
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின், நாடு முழுவ தும் லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கோவை வெள்ளக் கிணறு பகுதியில் உள்ள இவரது வீடு, அலுவலகம், ஹோமியோ பதி கல்லூரி மற்றும் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கடந்த 12-ந் தேதி காலை 7 மணி முதல் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநில பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
3-வது நாளாக சோதனை
நேற்று 3-வது நாளாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 60 மணி நேரத்தை கடந்தும் நடைபெற்று வரும் இந்த சோதனையில் அமலாக்க துறையினர் சில ஆவணங்களை கைப் பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களின் அடிப்படை யில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, அலுவலகங் கள் என நாடு முழுவதும் அவருக்கு தொடர்புடைய 70 இடங்க ளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் கோவையில் மட்டும் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதன்பின்னர் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய ரூ.450 கோடி சொத்துகளை முடக்கினர்.
ஆவணங்கள்
இதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் அமலாக்க துறையினர் கடந்த 12-ந் தேதி முதல் 60 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.