< Back
மாநில செய்திகள்
சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 390 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!!
மாநில செய்திகள்

சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 390 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்..!!

தினத்தந்தி
|
8 Dec 2022 11:30 PM IST

சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 390 கி.மீ தொலைவில் தீவிர புயலான மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல், மணிக்கு 15 கி.மீ வேகத்தில் தற்போது நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசை இருந்து 390 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 310 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் நாளை காலை வரை தீவிர புயலாக நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது.

நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்