< Back
மாநில செய்திகள்
38-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 7¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

கோப்புப்படம்

மாநில செய்திகள்

38-வது மெகா தடுப்பூசி முகாம்: தமிழகத்தில் 7¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தினத்தந்தி
|
26 Sept 2022 4:53 AM IST

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 38-வது மெகா தடுப்பூசி முகாமில் 7¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் நேற்று 38-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 7 லட்சத்து 75 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29 ஆயிரத்து 729 பேருக்கும், 2-ம் தவணையாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 804 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 5 லட்சத்து 95 ஆயிரத்து 660 பேருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 96.59 சதவீதமும், 2-ம் தவணையாக 91.61 சதவீதமும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்