< Back
மாநில செய்திகள்
ரெயிலில் 3,860 டன் அரிசி வருகை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ரெயிலில் 3,860 டன் அரிசி வருகை

தினத்தந்தி
|
14 Feb 2023 3:36 AM IST

நெல்லைக்கு ரெயிலில் 3,860 டன் அரிசி வந்துள்ளது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கடந்த 3 நாட்களாக ரேஷன் அரிசி, நெல் மூட்டைகள் கொண்டு வரப்படுகிறது. கடந்த 11-ந்தேதி மேற்கு வங்காளத்தில் இருந்து 2,800 டன் ரேஷன் அரிசியும், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 1,700 டன் அரிசியும் கொண்டு வரப்பட்டது.

நேற்று தஞ்சாவூரில் இருந்து 21 சரக்கு ரெயில் பெட்டிகளில் 1,260 டன் அரிசியும், மேற்கு வங்காளத்தில் இருந்து 2,600 டன் ரேஷன் அரிசியும் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் இருந்து மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி லாரியில் ஏற்றி உணவு பாதுகாப்பு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்