< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.384¼ கோடி பயிர்க்கடன்
திருவாரூர்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.384¼ கோடி பயிர்க்கடன்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:15 AM IST

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.384¼ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்கடன்

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 2022-23-ம் ஆண்டில் 67 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 139 ஏக்கருக்கு ரூ.384.37 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் போன்ற அனைத்து விதமான கடன் உதவிகள் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினராக சேரலாம்

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினராக சேர விரும்புபவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட்சைஸ் போட்டோ சமர்ப்பித்து பங்குத்தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம்.

மேலும் நகர கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் நகைக்கடன். மத்திய கால கடன் மற்றும் மாற்றுத்திறன்களுக்கான கடன், மகளிர் சுய உதவி கடன், விதவைகளுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு கடன் போன்ற கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உரம்

உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதர கடன்களை பெற்று பயனடையலாம். உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை சில்லறை விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் கூட்டுறவு சார் பதிவாளர் கள அலுவலர்கள், திருவாரூர் தாலுகா 7338749215, கொரடாச்சேரி தாலுகா 7338749218, குடவாசல் தாலுகா 7338749217, நன்னிலம் தாலுகா 7338749216, வலங்கைமான் தாலுகா 7338749219, மன்னார்குடி தாலுகா 7338749221, கோட்டூர் தாலுகா 7338749222, நீடாமங்கலம் தாலுகா 7338749220, திருத்துறைப்பூண்டி தாலுகா 7338749223, முத்துப்பேட்டை தாலுகா 7338749224 ஆகிய செல்போன் எண்களுக்கும்,, துணைப்பதிவாளர்கள் திருவாரூர் சரகம் 7824039202. மன்னார்குடி சரகம் 7338749203 மற்றும் மண்டல இணைப்பதிவாளர் திருவாரூர் 7338749200 ஆகியோரை மேற்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்