< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 37 பேர் கைது
கரூர்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 37 பேர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:23 AM IST

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

தரகம்பட்டி அருகே உள்ள சீத்தப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி கொடிகம்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

இதையடுத்து கொடி கம்பத்தை சேதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் தலைமையில் அக்கட்சியினர் மயிலம்பட்டியில் இருந்து சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 37 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்