< Back
மாநில செய்திகள்
37 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் நிறைவு பெறும்
திருவாரூர்
மாநில செய்திகள்

37 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் நிறைவு பெறும்

தினத்தந்தி
|
22 Sept 2022 12:15 AM IST

37 கி.மீ. தூரத்திற்கு அகல ரெயில் பாதை பணிகள் விரைவில் நிறைவு பெறும்

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ தூரத்திற்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்று திருச்சி ரெயில்வே கோட்ட மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன்பள்ளி

திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்கு உட்பட்ட கடலோர பகுதியான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ தூரத்திற்கு மீட்டர் கேஜ் ரெயில் பாதை இருந்தது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிக்கு மத்திய அரசு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து கடந்த 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தென்னக ரெயில்வே கட்டுமான அமைப்பால் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த அகல ரெயில் பாதை பணி நடைபெறும் வழித்தடத்தில் 79 சிறிய பாலங்களும், 4 ரெயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது மண், ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டு எந்திரங்கள் மூலம் சமப் படுத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதிகட்டத்தில் பணிகள்

இந்த வழித்தடத்தில் கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை மற்றும் வேதாரண்யம் ஆகிய 4 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெற உள்ளது.

பணிகள் நிறைவு பெற்ற பின்னர் பெங்களூருவில் உள்ள தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தில் ரெயிலை இயக்கி ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும், பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு முடிந்து அனுமதி வழங்கிய பிறகு பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் சேவை தொடங்கப்படும் என்றும் திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

உப்பு ஏற்றுமதி

இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கியதற்கு பின்னர் பல ஆண்டுகளாக அகஸ்தியம்பள்ளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த உப்பு ஏற்றுமதியை மீண்டும் காணமுடியும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கப்படும் ரெயில் சேவை கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பயனளிக்க உள்ளது.

மேலும் செய்திகள்