< Back
மாநில செய்திகள்
டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வை 36,574 பேர் எழுதினர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வை 36,574 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
24 July 2022 10:16 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 36 ஆயிரத்து 574 பேர் எழுதினர்

கள்ளக்குறிச்சி

143 தேர்வு மையங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு(டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுதும் 143 மையங்கள் அமைக்கப்பட்டன.

முன்னதாக தேர்வு எழுதுவதற்காக அதிகாலையிலேயே இளைஞர்கள், பெண்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். சில பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினருடன் வாகனங்களில் வந்திருந்தனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் சிலர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் மட்டும் 5,700 பேர் தேர்வு எழுதினார்கள். இதனால் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்தவர்களை பார்த்தபோது பெரும் திருவிழா கூட்டம் போல காட்சி அளித்தது.

முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

6,026 பேர் தேர்வு எழுதவில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுத விண்ணப்பித்த 42 ஆயிரத்து 600 பேரில் 36 ஆயிரத்து 574 பேர் தேர்வு எழுதினார்கள். 6 ஆயிரத்து 26 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வேளாண்மை நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வரும் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயின்றவர்களும் தேர்வை எழுதியுள்ளனர். பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு பயிற்சி பெற்று அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்