மதுரை
மதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது
|மதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி தெப்பக்குளம், ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, செல்லூர், திலகர் திடல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்தும் சிலர் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்தந்த போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது கஞ்சா விற்பனை செய்த 24 பேரை கைது செய்து கஞ்சா, செல்போன் மற்றும் அதை விற்று வைத்திருந்த 13 ஆயிரத்து 900 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 191 பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரையில் ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா, மது விற்பனை செய்த மொத்தம் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.