< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 354 மனுக்கள் பெறப்பட்டன
|29 Nov 2022 12:15 AM IST
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் 354 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 354 மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சமமாக வளர்க்க வேண்டும் என்கிற உறுதி மொழியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.