< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 350 கிலோ சுறா மீன் காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கியது
|11 Aug 2023 7:49 AM IST
காசிமேடு,
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் 10 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். அப்போது ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 மீனவர்கள் வலையை இழுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து மீனவர்கள் 10 பேரும் சேர்ந்து வலையை இழுக்க முயற்சி செய்தனர். கடலுக்கு மேலே வலை வந்தபோது அதில் தடை செய்யப்படாத பெரிய சுறா மீன் சிக்கியது தெரிந்தது. பின்னர் காசிமேடு கரைக்கு திரும்பிய மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாவை எடை போட்டதில் 350 கிலோ இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.