< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 35 பேர் கைது
|27 Jun 2023 1:24 PM IST
திராவிடர் தமிழர் பேரவையை சேர்ந்த ஏராளமானோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர்.
கோவை,
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது முறையற்ற விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை மற்றும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து, திராவிடர் தமிழர் பேரவை சார்பில் வருமானவரித்துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி திராவிடர் தமிழர் பேரவையை சேர்ந்த ஏராளமானோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர். தொடர்ந்து, ஒன்றிய பா.ஜனதா அரசு மற்றும் அமலாக்க துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற 50 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.