< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3.5 கிலோ தங்கம் கடத்தல் - 7 பேர் கைது
|6 Sept 2022 10:38 AM IST
பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விமானத்தில் வந்த 7 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.