< Back
மாநில செய்திகள்
இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக கடத்தி வந்த 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக கடத்தி வந்த 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது

தினத்தந்தி
|
29 Oct 2022 6:15 PM IST

இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக 35.6 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி வந்த 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை,

இலங்கையில் இருந்து கடல் வழியாக 35.6 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டு உள்ளதாகவும், கடத்தல்காரர்கள் மதுரை-ராமநாதபுரம் வழியாக குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரில் சென்றுக் கொண்டிருப்பதாகவும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள சுங்கச்சாவடியில் வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட பதிவெண் கொண்ட கார் வந்த போது அதனை மடக்கினர். காரில் 3 பேர் இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

காரில் ரூ.18.34 கோடி மதிப்புடைய 35.6 கிலோ வெளிநாட்டு தங்கக்கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக கடற்கரை வழியாக கடத்தி வரப்பட்ட 105 கிலோவுக்கு மேற்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை வருவாய் புலானய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்