< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேர் கைது
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேர் கைது

தினத்தந்தி
|
17 Jun 2022 8:49 PM IST

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பொன்.கணேசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசம் கட்சியின் தலைவரும், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவருமான கே.கே.செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, அன்பு, முருகானந்தம் உள்பட 35 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.





மேலும் செய்திகள்