< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
347 மூட்டை நிலக்கடலை ரூ.7½ லட்சத்துக்கு விற்பனை
|21 July 2022 12:15 AM IST
347 மூட்டை நிலக்கடலை ரூ.7½ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
குளத்துப்பாளையம், குந்தாணிபாளையம், வடுகபட்டி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் நிலக்கடலை பயிர் செய்துள்ளனர். நிலக்கடலை நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், நொய்யல் அருகே சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் 347 மூட்டை நிலக்கடலை ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 352-க்கு விற்பனையானது.