< Back
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 345 பவுன் நகைகள் பறிமுதல் - 2 பேர் கைது
மாநில செய்திகள்

மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 345 பவுன் நகைகள் பறிமுதல் - 2 பேர் கைது

தினத்தந்தி
|
24 Dec 2022 9:15 PM IST

மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துவந்த 345 பவுன் நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் ரெயில்வே போலீசார் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் பயணிகள் இருவரை அழைத்து அவர்கள் விசாரித்தனர்.

ஆனால் முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் கொண்டுவந்த உடமைகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 2.760 கிலோ எடையுள்ள 345 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. மேலும், நகை குறித்த விவரங்களை அவர்களிடம் ரெயில்வே போலீசார் கேட்டனர்.

உரிய விளக்கம் தரமறுத்த அவர்களிடம், நகைக்கான எந்த ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 345 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்