< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 343 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 343 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
20 Sept 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 343 மனுக்கள் பெறப்பட்டன.


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 343 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு சுய தொழில் தொடங்க வங்கி கடன் மானியமாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் 100 சதவீதம் சிறப்பாக பணியாற்றிய 7 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்