< Back
மாநில செய்திகள்
அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.42 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் - 4 பேர் கைது
மாநில செய்திகள்

அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.42 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
16 April 2023 2:48 PM IST

கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அபுதாபியில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய 4 பயணிகளிடம் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது 4 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 3 கிலோ 422 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 25 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப்டாப்கள், சிகரெட்டுகள் ஆகியவற்றையும் அவர்களிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்