கள்ளக்குறிச்சி
5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம்
|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 29 போலீசார் உள்பட 34 போலீசாரை பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் கச்சிராயப்பாளையத்திற்கும், கீழ்குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி தியாகதுருகத்துக்கும், மூங்கில்துறைப்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமு மணலூர்பேட்டைக்கும், சங்கராபுரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பையா கள்ளக்குறிச்சிக்கும், ராஜேந்திரன் பகண்டை கூட்ரோட்டிற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ்காரர் சுசீந்திரன் திருநாவலூருக்கும், உளுந்தூர்பேட்டை சரவணன் மூங்கில்துறைப்பட்டுக்கும், கச்சிராயபாளையம் ரேகா கீழ்குப்பத்திற்கும், கச்சிராயப்பாளையம் மணிமேகலை சங்கராபுரத்திற்கும், கள்ளக்குறிச்சி கருணாகரன் திருநாவலூருக்கும் என 29 போலீஸ்காரர்களையும் இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.