< Back
மாநில செய்திகள்
சென்னை அடையாறு பகுதியில் 330 போதை மாத்திரைகள் பறிமுதல் - 3 பேர் கைது
மாநில செய்திகள்

சென்னை அடையாறு பகுதியில் 330 போதை மாத்திரைகள் பறிமுதல் - 3 பேர் கைது

தினத்தந்தி
|
12 Oct 2022 11:48 AM IST

சென்னை அடையாறு பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை வேளச்சேரி, கிண்டி, தரமணி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சென்னை அடையாறு பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வேளச்சேரியை சேர்ந்த இளைஞர்களான விக்னேஷ், ராஜ்குமார், ஜோஸ்வா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 330 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்