கடலூர்
ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 33 பேர் கைது
|சிதம்பரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம்,
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் மாவட்ட தலைவர் செம்மலர், மாவட்ட துணை செயலாளர் லெனின் உள்ளிட்டவர்கள் நேற்று சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ரெயில் நிலையம் அருகே சென்றபோது, அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர், அக்னிபத், திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டு என கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 33 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.