பெரம்பலூர்
33 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை
|33 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு விடுமுறை அளிக்கலாம் அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்கி பணியில் ஈடுபடுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உதவி ஆணையர் (அமலாக்கம்) கா.மூர்த்தி தலைமையில் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முசிறி மற்றும் பெரம்பலூர் -அரியலூர், மாவட்டங்களில் 49 தனியார் நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 33 நிறுவனங்கள் தொழிலாளர் சட்ட விதிமுறையை கடைபிடிக்காதது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.