< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் வங்கி கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடியதாக புகார் - 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
|19 July 2022 4:54 PM IST
வங்கியின் கருவூலத்தில் இருந்து ரூ.3.28 கோடி திருடிய புகாரில் வங்கி அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
கோவை,
கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் வங்கியின் கருவூலத்தில் இருந்து சுமார் 3 கோடியே 28 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக சம்பந்தபட்ட வங்கியைச் சேர்ந்த 4 அதிகாரிகள் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து அந்த அதிகாரிகளிடம், முறைகேடு செய்யப்பட்ட பணம் தொடர்பான ஆவணங்கள் குறித்து சி.பி.ஐ. தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.