< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 326 நாட்கள் சிறை தண்டனை - துணை கமிஷனர் பகலவன் உத்தரவு

16 July 2022 12:36 PM IST
நன்னடத்தை விதியை மீறிய ரவுடிக்கு 326 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து துணை கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 29). ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் முன்னிலையில் ஆஜராகி திருந்தி வாழ்வதாக உறுதி மொழி எழுதி கொடுத்தார். ஆனால் அந்த உறுதிமொழியை மீறி, நன்னடத்தை விதிகளுக்கு மாறாக நடந்ததால், மணிமாறனுக்கு 326 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து துணை கமிஷனர் பகலவன் உத்தரவிட்டார்.
அதே போன்று நன்னடத்தை விதியை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக, அரவிந்தன் (24) என்ற வாலிபருக்கு 53 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து, மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷாமிட்டல் உத்தரவிட்டுள்ளார். மணிமாறன், அரவிந்தன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.