< Back
மாநில செய்திகள்
தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்; அதிகாரி தகவல்
திருச்சி
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள்; அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
6 Oct 2023 2:50 AM IST

தொழிற்சாலைகளின் உரிமத்தை புதுப்பிக்க 31-ந் தேதி கடைசி நாள் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகள் உரிமம்

திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் 2024-ம் ஆண்டிற்கான உரிமத்தை வருகிற 31-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை.

உரிமத்தை புதுப்பிக்க https://dish.tmn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

31-ந் தேதி கடைசி நாள்

ஒரே நேரத்தில் 15 ஆண்டுகள் வரை உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றுக்கு ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவம்-2 மற்றும் தகுந்த சான்றுடன் திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பு வைக்க வேண்டும்.

அதுபோல் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களும் ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். 31-ந் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாமதக்கட்டணம் பொருந்தும். ஆன்லைனில் சமர்ப்பித்து உரிமம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதால் கடைசி நேர நெருக்கடி மற்றும் இணைய வழி சிக்கல்களை தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு தொழிற்சாலை நிர்வாகங்களை திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் மாலதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்