< Back
மாநில செய்திகள்
20 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல் நாளில் 319 பேர் விண்ணப்பம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

20 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல் நாளில் 319 பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
5 July 2022 12:41 AM IST

20 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முதல் நாளில் 319 பேர் விண்ணப்பம் அளித்தனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள மொத்தம் 20 பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் சார்ந்த கல்வி மாவட்ட அலுவலரிடம் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது அனைத்து கல்வி சான்றுகளுடன் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் அறிவித்திருந்தார்.

இதன்படி நேற்று முதல் நாளில் விண்ணப்பிக்க பெரம்பலூர், வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அலுவலர் சண்முகமும், வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அலுவலர் ஜெகநாதனும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்றனர். முதல் நாளான நேற்று பெரம்பலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் 168 விண்ணப்பங்களும், வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் 151 விண்ணப்பங்களும் என மொத்தம் 319 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்